தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு மார்க்கெட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோயம்பேடு மார்க்கெட் சென்றால் சலுகை விலையில் அனைத்து காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என்று எண்ணி சென்ற பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.
மேலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால், தங்கள் சொந்த ஊரை தேடிச் சென்ற பலருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர் திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதியானது என்றும், * கோயம்பேட்டில் இருந்து அரியலூர் வந்த 19 பேருக்கும், பெரம்பலூர் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபின்னரே தொற்று இருக்கின்றதா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என மொத்தம் 38 பேர்களுக்கு கொரோனா பாதித்த தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டால் தமிழகம் முழுவதும் கொரோனா பரவிவரும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments