தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு மார்க்கெட்

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

கோயம்பேடு மார்க்கெட் சென்றால் சலுகை விலையில் அனைத்து காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என்று எண்ணி சென்ற பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

மேலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால், தங்கள் சொந்த ஊரை தேடிச் சென்ற பலருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர் திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதியானது என்றும், * கோயம்பேட்டில் இருந்து அரியலூர் வந்த 19 பேருக்கும், பெரம்பலூர் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபின்னரே தொற்று இருக்கின்றதா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என மொத்தம் 38 பேர்களுக்கு கொரோனா பாதித்த தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டால் தமிழகம் முழுவதும் கொரோனா பரவிவரும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

சென்னையில் 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத 7 பகுதிகள்!

சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவும் பகுதி என 7 பகுதிகளை கண்டறிந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட

ஒரே தெருவில் 19 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவும், ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ரூ.100 அபாரதம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்! அஜித்துக்கு பிரபல நடிகை வாழ்த்து

சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் மோதுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறியபோது