மணிமேகலை - பிரியங்கா விவகாரத்துல நாம தான் முட்டாள்: கேபிஒய் சரத்

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த கே. பி. ஓய் சதிஷ், அவங்க இன்றைக்கு அடிச்சுக்குவாங்க, நாளைக்கு சேர்ந்து இருப்பாங்க. இதுக்கு நடுவுல நாம தான் முட்டாளாக இருப்போம், என்று தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையிலான பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு தரப்பினருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேபிஒய் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சதீஷ், தற்போது சட்டம் என் கையில் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் மணிமேகலை விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது, இது நாட்டுக்கு தேவையான பிரச்சனையா? தேவையில்லாமல் பிரச்சனை செய்து, அதை வீடியோவாகவும் பண்ணி, இதெல்லாம் தேவையில்லாதது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவங்க போட்ட வீடியோ மூலம் எல்லாம் சம்பாதிச்சுட்டாங்க. இன்னொருத்தவங்க சம்பாதிச்சுகிட்டு இருக்காங்க. அந்த வீடியோவை பார்க்கிற நாம தான் ஒன்னுமே இல்லாமல் இருக்கிறோம். அதனால், இது முக்கியமான விஷயமே கிடையாது. இது ஒரு சின்ன ஈகோ விஷயம். நான் யாருக்கும் ஆதரவு தர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள்; நாளைக்கு சேர்ந்து கொள்வார்கள். நடுவில் நாம தான் முட்டாள் ஆகிவிடுவோம், என்று தெரிவித்துள்ளார்.

மேலும், யார் தங்களைப் பற்றி அதிகம் பேசுகிறார்களோ, அவர்களே டிஆர்பிக்காக இதை பண்ணுகிறாங்கன்னு சொல்லலாம். ஒரு வேளை நாம ஃபேமஸ் ஆகலான்னா, நம்மள மக்கள் மறந்துடுவாங்கன்னு நினைச்சு கூட இதைப் பண்ணி இருக்கலாம், என்றும் சதீஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.