நம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து!!! WHO என்ன சொல்கிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்டரி ராஜோலினா செய்தி வெளியிட்டு இருந்தார். மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நடைமுறைப் படுத்தி வந்த ஊரடங்கையும் அதிபர் தளர்த்தி உத்தரவிட்டார். கொரோனாவுக்கு எதிராக பல தென் ஆப்பிரிக்க நாடுகள் தத்தளித்து வரும் நிலையில் மடகாஸ்கர் ஊரடங்கை தளர்த்துவதைக் குறித்து கடும் கண்டனம் எழுப்பப் பட்டது. ஊரடங்கு நிலையில் அந்நாட்டில் 200 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டு இருந்தது. ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்டு அனைத்து தொழில்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலும் அந்நாட்டில் 448 பேருக்குத் தான் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் போது உண்மையிலே அவர்களின் மூலிகை மருந்து நல்ல பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது பல தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
கோவிட் ஆர்கானிக் என்ற பெயரில் விற்கப்பட்டு வரும் இந்த மூலிகை மருந்து தற்போது பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நேடியாக மடகாஸ்கரின் அதிபரே அந்த மருந்தை மக்கள் மத்தியில் குடித்து விளம்பரப் படுத்தவும் செய்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மூலிகைத் தாவரத்தில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப் படுவதாகவும் அந்நாட்டின் பழமையான பாரம்பரியம் இந்த மருந்தில் பயன்படுத்தப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. Green Gold, கோவிட் ஆர்கானிக் (COV) என்ற பெயரில் தற்போது விற்பனைக்கு இருக்கும் 11 அவுன் கொண்ட இந்த மருந்து பாட்டில் 35 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மருந்து குறித்து பேசிய அதிபர் இது வரலாற்றை மாற்றும் ஆற்றல் கொண்டது எனவும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியா, கொமோரோஸ் மற்றும் அட்லாண்டிக் பகுதியான கினியா, பிசாவ், எக்குவடோரியல் கினியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. கினியாவின் தலைவர், விமான நிலையம் போன்ற முக்கியப் பகுதிகளில் இந்த மருந்தைக் கட்டாயமாக்கி உள்ளார். இந்நிலையில் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படாத மருந்து என்ற எதிர்ப்பு குரலும் வர ஆரம்பித்து இருக்கிறது. பல நாடுகள் இந்த மருந்தை பரிசோதனை நிலையில் மட்டுமே வாங்கி இருக்கின்றன.
சீனாவில் முன்னதாக ஆர்ட்டெமிசியா அன்வா என்ற பெயரில் வெற்றிகரமாக மூலிகைத் தாவரத்தைக் கொண்டு மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப் பட்டது. கொரோனாவின் ஆரம்பத்தில் சீனாவின் மூலிகை பொருட்கள் கொரோனாவிற்கு எதிராக விளம்பரப் படுத்தப்பட்டும் வந்தது. ஆனால் இது நிமோனியாவை எதிர்க்க பயன்படுமே தவிர கொரோனாவை எதிர்க்க உதவாது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் மடகாஸ்கர் தங்களது மருந்து குறித்து WHO உறுதி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்று WHO வின் ஆப்பிரிக்கா கண்ட செயல் இயக்குநர் மாட்சிடிகோ மொயெட்டி மடகாஸ்கரின் மூலிகை மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மடகாஸ்கரோடு தொடர்பில்தான் இருக்கிறோம் எனவும் தெரிவித்து இருக்கிறார். இந்த கோவிட் ஆர்கானிக் (COV) மருந்து அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் கொரோனா விஷயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என பல ஆப்பிரிக்க நாடுகள் புதிய உற்சாகம் பெற்று வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout