கொரோனா தொற்றால் அச்சம்: கோவை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் காமாட்சிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கண்ணனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவர் தனக்கு கொரோனா தொற்று வந்து விட்டதாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் சொல்லி புலம்பியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நெடுநேரம் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கண்ணனைத் தேடி உள்ளனர் அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று அவருடைய குடும்பத்தினர் பார்த்தபோது, இறந்தது கண்ணன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது
இளைஞர் கண்ணன் தனக்கு கொரோனா இருப்பதாக கருதி ரயில் முன் மோதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே கொரோனா குறித்த அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments