கொரோனா தொற்றால் அச்சம்: கோவை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் இருகூர் காமாட்சிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கண்ணனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவர் தனக்கு கொரோனா தொற்று வந்து விட்டதாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் சொல்லி புலம்பியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நெடுநேரம் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கண்ணனைத் தேடி உள்ளனர் அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று அவருடைய குடும்பத்தினர் பார்த்தபோது, இறந்தது கண்ணன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது

இளைஞர் கண்ணன் தனக்கு கொரோனா இருப்பதாக கருதி ரயில் முன் மோதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே கொரோனா குறித்த அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

ரஜினி சொன்னதை பின்பற்றி வருகிறேன்: மாஸ்டர் பட நாயகி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அதாவது சசிகுமார் ஜோடியாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன். பிளாஷ்பேக்கில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே வரும்

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி சுமார் 40000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் 2000க்கும் மேற்பட்டோர்

என் புருஷன் சாவுக்கு அரசும், அந்த ஹோட்டலும் தான் காரணம்: ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் பேட்டி

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சர் எவர்டன் வீக்ஸ் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்

அங்க போயுமா??? உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ சிண்டம்ஸ் இன்க் (CSO.Co) நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.