26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாயகியாகும் கமல் பட நடிகை: இயக்குனர் இவர்தான்!

கடந்த 1995ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ’சதிலீலாவதி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த காமெடி நடிகை கோவை சரளா இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி நடிகையாக நடித்து வருபவர் கோவை சரளா என்பதும் அவரது காமெடி ரசிகர்களின் மனதை கவரும் வகையில் இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக கோவை சரளா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆதிவாசி பெண்ணாக நடிக்கும் கோவை சரளா தனது பேத்திக்கு நிகழ்ந்த கொடுமையை எதிர்த்து போராடும் பாட்டி கேரக்டரில் நடித்து உள்ளதாகவும் இந்த கேரக்டர் அவரது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாயகியாக நடிக்கும் கோவை சரளாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் மன்னிப்பு கேட்டாரா தமிழ் நடிகை: அவரே அளித்த விளக்கம்!

ஜிவி பிரகாஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் நடுரோட்டில் மன்னிப்பு கேட்டதாக இணைய தளங்களில் பரவி வரும் வீடியோவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்

நல்லவேளை இந்த புரமோவில் அபிஷேக் இல்லை: ஆனால் பாவனி ரெட்டி..

கடந்த சில நாட்களாக விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் மூன்று புரமோக்களிலும் அபிஷேக் தான் வருகிறார் என்பதும் அதேபோல் ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் அவர் ஆக்கிரமித்துக்

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா என்ன செய்கிறார் தெரியுமா?

கடும் மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்து கொண்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விலங்குகளுக்கும் தடுப்பூசியா? புதிய பாதிப்பால் அமெரிக்க எடுத்த முக்கிய முடிவு!

அமெரிக்காவில் உள்ள உயிரியியல் பூங்காக்களில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்திருக்கிறது.