கோவை சிறுமி கொலை விவகாரம்: தகவல் தெரிவித்தால் சன்மானம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன்பின் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஒருசிலரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தாலும் இன்னும் முக்கிய குற்றவாளி குறித்த துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் காவல்துறையினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
துடியலூர் காவல்நிலைய குற்ற எண் Girl Missing @302 IPC @ 376A @376 (A) IPCm POSCO Actல் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது' என்ற அறிவிப்புடன் தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி மற்றும் செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments