கோவை சிறுமி கொலை விவகாரம்: தகவல் தெரிவித்தால் சன்மானம்

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன்பின் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

இந்த வழக்கில் ஒருசிலரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தாலும் இன்னும் முக்கிய குற்றவாளி குறித்த துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் காவல்துறையினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

துடியலூர் காவல்நிலைய குற்ற எண் Girl Missing @302 IPC @ 376A @376 (A) IPCm POSCO Actல் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது' என்ற அறிவிப்புடன் தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி மற்றும் செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

More News

தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகும் யோகிபாபு படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கதாநாயகனாகவும் அவர் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாகியுள்ளார்

ஒரு அசுரன் அல்ல, இரண்டு அசுரன்கள்; தனுஷ் குறித்து வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

'உறியடி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் விஜயகுமார் நடித்து இயக்கி வந்த 'உறியடி 2' திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

சுந்தர். சி படப்பிடிப்பில் விஷாலுக்கு விபத்து

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'மதகஜராஜா' மற்றும் 'ஆம்பள' படங்களுக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் விஷால் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.