ஊழியர்கள் அலட்சியத்தால் கொரோனா நோயாளி பலி....!

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

கோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் அலட்சியத்தால், கொரோனா நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் தான் டீ விற்பனையாளர் ரவி. இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் தீர்ந்து போன சிலிண்டரை அவருக்கு பொறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மூச்சுவிட முடியாமல், அவர் ஸ்டெச்சரிலே உயிரிழந்து விட்டார்.

ஊழியர்களின் அலட்சியத்தால் தான், ரவி இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்குறியும் உருவாகியுள்ளது. இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.