ஒரே நபரை மாறி மாறி மூன்று திருமணம் செய்து கொண்ட நடிகை: 6 குழந்தைகள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Monday,May 23 2022]

அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவர் தனது காதலரை மாறி மாறி மூன்று முறை திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மற்றும் மாடல் கோர்ட்னி கர்தாஷியன், ட்ரம்ஸ் கலைஞனாக டிராவிஸ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த காதலர்கள் சமீபத்தில் லாஸ் வேகாஸ் சென்ற போது, அங்கு ஜாலியாக ஒரு முறை திருமணம் செய்தார்கள்.

இருப்பினும் அது சட்டப்படியான திருமணம் இல்லை என்பதால் கலிபோர்னியாவில் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் இரு தரப்பினருக்கும் தனித்தனியாக பிறந்த குழந்தைகளின் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக மூன்றாவது முறையாக இத்தாலி அரண்மனை ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் கோர்ட்னியின் மகன்கள் மேசன், ரெய்ன், மகள் பெனிலோபி, டிராவிஸின் மகன் லாண்டன், மகள்கள் அலபாமா, அடியானா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

More News

சென்னை மெட்ரோ ரயில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலம்!

சென்னை மெட்ரோ ரயிலில் நடந்த படப்பிடிப்பில் பாலிவுட் பிரபலம் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமந்தாவுடன் 8 வருடங்கள்: 'மனம்' திறந்த நாக சைதன்யா

சமந்தாவுடன் நாகசைதன்யா நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகி எட்டு வருடங்கள் ஆகியதை அடுத்து அந்த படம் குறித்த தனது மலரும் நினைவுகளை நடிகர் நாக சைதன்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .

உதயநிதியின் 'மாமன்னன்' படத்தில் இணைந்த 'விக்ரம்' பட நடிகர்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாமன்னன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 'விக்ரம்'

கேரள இளம்பெண்ணின் மர்ம மரண வழக்கு: கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென கழன்று விழுந்த ஆடை: நடிகைக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்