பிரபல இயக்குனர் மீது நடிகை கூறிய பாலியல் புகார்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது காலங்காலமாக நடைபெற்று வந்தாலும், கடந்த சில வருடங்களாக நடிகைகள் இதனை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். இதனால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அவ்வப்போது வெளியே தெரிய வந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை இன்னும் தைரியமாக சொல்வதில்லை. இந்த நிலையில் கொரிய நாட்டு நடிகை ஒருவர் தன்னை இயக்குனர் மற்றும் நடிகர் பாலியல் தொல்லை செய்ததாக கூறி அவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.

கொரிய நாட்டு நடிகை ஒருவர் அந்நாட்டின் பிரபல திரைப்பட இயக்குனர் கிம் மற்றும் நடிகர் சோ ஜே ஹ்யூன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த கொடுமையான சம்பவத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்தே விலகிவிட்டதாகவும் அந்த நடிகை கூறியுள்ளார். இதே இயக்குனர் மீது இன்னும் இரண்டு நடிகைகளும் பாலியல் புகார் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது