இந்தியாவை புரட்டி போட்ட ரயில் விபத்து.. ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
20 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் நிகழும் மோசமான ரயில் விபத்தாக நேற்று நடந்த கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 285 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றிரவு ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதை அடுத்து இதுவரை 280 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள் உதயநிதி, எஸ்எஸ் சிவசங்கர் ஆகியோர் விபத்து நடந்த ஒரிசாவுக்கு செல்வதாகவும் தமிழ்நாட்டில் இருந்து அதிகாரிகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதை அடுத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த பயணிகள் விவரங்கள் குறித்து அவரது அவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார் என்பதும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் இன்று நடைபெற இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout