போரியா.. இல்லை செருப்பால அடிக்கட்டுமா? அம்மு அபிராமியின் 'ஜமா' டீசர்..!

  • IndiaGlitz, [Sunday,July 14 2024]

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடித்த ’ஜமா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’கூழாங்கல்’ என்ற பல விருது பெற்ற திரைப்படங்களை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜமா’. இந்த படத்தை .பாரி இளவழகன் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் சேட்டன், அம்மு அபிராமி, மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையில் அவரே இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோ ஒரு கூத்து கலைஞர் என்ற நிலையில், அவர் கூத்துகளில் பெண் வேடம் போட்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அம்மு அபிராமி மீது காதல் ஏற்பட அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் அனைத்து தரப்பினர் வரவேற்பையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.