நயன்தாரா பட இயக்குனரின் சாதி மறுப்பு திருமணம்: நடத்தி வைத்த இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்த முதல் திரைப்படமான ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் சாதி மறுப்பு திருமணத்தை பிரபல இயக்குனர் ஒருவர் நடத்தி வைத்துள்ளார்.
நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம் ’கூழாங்கல்’. இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் தனது தோழியும் காதலியுமான அறிவு நிலா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை பிரபல இயக்குநர் ராம் நடத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் நண்பர்கள் மற்றும் திரையுலகினர் சூழ இந்த திருமணம் சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தனது காதல் குறித்து இயக்குனர் வினோத் ராஜ் கூறியபோது ’நானும் அறிவு நிலாவும் ஒருமுறை ரயிலில் தான் தற்செயலாக சந்தித்தோம். ஒருவருக்கொருவர் பேசத் தொடங்கி நண்பர்களாக இருந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து தொடங்கினோம். நம்முடைய தொழில் சினிமா என்பதால் பல இடங்களுக்கு டிராவல் செய்ய வேண்டும் என்பதால் காதல் சரிப்பட்டு வருமா? என முதலில் யோசித்தேன். ஆனால் அறிவு நிலா காதலில் உறுதியாக இருந்ததால், நம்மை புரிந்து கொண்டவர் நம்முடன் வாழ்வது மகிழ்ச்சியான விஷயம் தானே என்று முடிவு செய்து திருமணம் செய்து கொண்டேன்.
கண்டிப்பாக எங்களை அவருடைய அம்மா அப்பா ஒரு நாள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார் வினோத் ராஜ் அறிவு நிலா திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Feeling emotional!!!Pebbles won the Tiger Award 2021. Our Hardwork, patience & Dream finally came true.Thank you all for your love and support.@IFFR @IFFRPRO @filmbazaarindia
— Vinothraj PS (@PsVinothraj) February 8, 2021
@VigneshShivN #Nayanthara @Rowdy_Pictures @thisisysr @AmudhavanKar
@thecutsmaker @ParthiBDOP https://t.co/KSlvp44QtY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments