கூவத்தூர் விடுதி மூடப்பட்டது. எங்கே தங்குவார்கள் எம்.எல்.ஏக்கள்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுபில் கலந்து கொள்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து வெளியே வந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் இருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்றே கருதப்படுகிறது. எனவே மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட் சற்றுமுன்னர் திடீரென மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூவத்தூர் விடுதி மூடப்படுவதாக அந்த விடுதியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் அடுத்து எங்கே தங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More News

மீண்டும் தள்ளுமுள்ளு. 2வது முறையாக சட்டசபை ஒத்திவைப்பு

இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பை இன்னொரு நாளில் நடத்த கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏ. பெரும் பரபரப்பு

ரகசிய வாக்கெடுப்பு என்பதில் ஓபிஎஸ் அணி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் உறுதியாக இருப்பதால் இன்று வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

காவலர்களுடன் தள்ளுமுள்ளு செய்யும் திமுக எம்.எல்.ஏக்கள்

இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டமன்றம் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமளியில் எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்.

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

இன்று காலை கூடிய நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளியில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் தனித்தனியாக ஆலோசனை.

தமிழக சட்டசபை ரகளை காரணமாக 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.