கூவத்தூர் விடுதி மூடப்பட்டது. எங்கே தங்குவார்கள் எம்.எல்.ஏக்கள்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுபில் கலந்து கொள்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து வெளியே வந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் இருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்றே கருதப்படுகிறது. எனவே மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட் சற்றுமுன்னர் திடீரென மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூவத்தூர் விடுதி மூடப்படுவதாக அந்த விடுதியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் அடுத்து எங்கே தங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.