செல்ஃபி மோகத்தால் கூவத்தில் மிதந்த இளைஞர்... சுவாரசிய சம்பவம்!
- IndiaGlitz, [Monday,April 12 2021]
கொரோனா காலத்திலும் செல்ஃபி மோகத்திற்கு மட்டும் குறைவே இல்லாமல் இருந்து வருகிறது. எவ்வளவு கடுமையான வேலைக்கு நடுவிலும் செல்போனை பயன்படுத்தும் நம் மக்கள் கொரோனா நேரத்தில் மேலும் செல்போனிற்கு அடிமையாகிக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி கூவம் ஆற்றில் விழுந்து விட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மூர்த்தி என்பவர் நேற்று நேப்பியர் பாலத்தில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்று இருக்கிறார். இப்படி செல்ஃபி எடுக்கும்போது அவர் தவறுதலாக கூவத்தில் விழுந்து இருக்கிறார். இதைப் பார்த்த சிலர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கவே அவரை மீட்பு படையினர் வந்து மீட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கூவத்தில் விழுந்த இளைஞரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் செல்ஃபி மோகத்தால் பாலத்தின் மீது ஏறி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் செல்ஃபி மோகம் ஏற்படுத்தும் இதுபோன்ற சிக்கலைக் குறித்து சமூகநல ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.