கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்
- IndiaGlitz, [Wednesday,October 24 2018]
சினிமா கலைஞர்கள் உள்பட பலருக்கு வழிகாட்டியாக இருந்த கூத்துப்பட்டறையின் நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82
தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தை சேர்ந்த ந.முத்துசாமி சென்னையில் கூத்துப்பட்டறை அமைத்து பல நாடகங்கள் அமைத்ததோடு, நடிப்பு உள்பட பல்வேறு பயிற்சியும் கொடுத்து வந்தார்.
கடந்த 1977ஆம் ஆண்டு நாடக ஆசிரியராக இருந்த ந. முத்துசாமி அவர்கள் உருவாக்கிய இந்த கூட்டுப்பட்டறை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் விஜய்சேதுபதி, பசுபதி, குரு சோமசுந்தரம், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி அவர்கள் சங்கீத் நாடக விருது மற்றும் பத்மஸ்ரீ விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு புதியதாக திரைத்துறைக்கு வர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பேரிழப்பு ஆகும்