கொஞ்சம் லோக்கலா களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'டிராகன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி, நடித்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’எல்ஐகே’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'டிராகன்’ என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமீதா பாஜு நடித்து வருகிறார்
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தில் ஒரு பேருந்தின் மேல் பகுதியில் பிரதீப் ரங்கநாதன் உட்கார்ந்திருப்பது போன்றும், அந்த பேருந்தில் "வொர்ஸ்ட் ஸ்டூடன்ட்" என்று பெயர் பலகை இருப்பது போன்றும் உள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிரதீப் ரங்கநாதன், "கொஞ்சம் லோக்கலா" என்று கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில், இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோ ஜோன்ஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது,.
#DragonFirstLook 🐲
— Pradeep Ranganathan (@pradeeponelife) October 12, 2024
Konjam local ah !! 🐉🔥#Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi@aishkalpathi @Ags_production pic.twitter.com/8EeMKh080t
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com