டுவிட்டரில் அதிரும் கொங்குநாடு....! தமிழகம் 2- ஆக பிரிவது சாத்தியமா...?

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

டுவிட்டரில் கொங்குநாடு என்ற தலைப்பில் ஹேஸ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. திமுக மற்றும் பாஜக அரசுகளை கலாய்த்தும் நெட்டிசன்கள் டுவிட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதையடுத்து, காலை முதல் இணையத்தில் கலை கட்டி வருகிறது கொங்குநாடு டாப்பிக்.

கொங்கு நாடு தனி மாநிலமாக வலிமையாக எழ முடியாத நிலையில், தமிழகத்தை பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பாஜக அரசு கொங்கு நாட்டை தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சிக்கிறதா...?தமிழகத்திலிருந்து கொங்கு நாட்டை பிரிப்பது சாத்தியமா...? என்ற கேள்வி காலை முதல் இணையத்தில் வலம் வருகிறது. அதிலும் இங்கு தலைநகராக கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், எதை வைத்துக்கொள்ளலாம் என்ற வாக்கெடுப்புக்கு இணையத்தில் நடந்து வருகிறது.

ஜெய்ஹிந்த் , ஒன்றிய அரசு போன்ற விவகாரங்களால், தமிழக மாநில மீது, மத்திய அரசு கடும் கோபத்துடன் இருக்கிறது. இதன் விளைவே கொங்கு நாட்டை தனி யூனியன் பிரதேசமாக்குவது குறித்து ஒன்றிய அரசு பேசி வருவதாகவும், இதுதான் பாஜகவின் அடுத்த மூவ் என்றும் கூறப்படுகிறது.

பாஜக காய் நகர்த்துவது எப்படி...?

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியாக கருதப்படும், கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. இங்கு 10 லோக்சபா தொகுதிகளும், 61 சட்டசபை தொகுதிகளும், இன்னும் சில தொகுதிகளை சேர்த்தால் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கும். இந்த காரணத்தால், புதுச்சேரி போல, கொங்கு நாட்டை பிரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டே தமிழக பாஜக நிர்வாகிகளை நியமனம் செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றது. குறிப்பாக மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல். முருகன் பற்றி பேசும் போதே, அவரின் பயோவில் கொங்கு நாடு என்ற வார்த்தை அடிபட்டதாம்.

வருகின்ற 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்றவே கொங்குநாட்டை அஸ்திரமாக எடுத்துள்ளது. எல். முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கியது, வானதி சீனிவாசனை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவராக்கியது, அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்ததற்கு பின்னால் இருக்கும் மறைமுக காரணம், கொங்குநாடு எனக் கூறப்படுகின்றது. தமிழக அரசியலில் கொங்குமண்டலம் அதிமுக-வின் கோட்டை என்று கூறி வந்த நிலையில், இதனுடன் பாஜகவும் கைகோர்த்துள்ளதால், ஆளும் திமுக அரசு அதிர்ச்சியையே சந்தித்துள்ளது.

சட்டம் கூறுவது என்ன...?

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மூன்றாம் சட்டப்பிரிவின் படி, இந்திய நாட்டின் எல்லைக்குட்பட்ட மாநிலங்களின் பரப்பளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ, எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்தவோ, பெயர்களில் மாற்றம் ஏற்படுத்தவோ, ஒன்றிய அரசிற்கு உரிமை உள்ளது எனக்கூறுகின்றது.

ஆனால் மாநிலத்தின் சட்டமன்ற ஒப்புதல்கள் இல்லாமல், மாநிலத்தை பிரிக்க வாய்ப்புகள் இல்லை என
சட்ட நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.

 

More News

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை முடித்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

பிகில் படத்தை பார்த்து கொண்டே சிகிச்சை: சிறுவனுக்கு விஜய் தரப்போகும் பரிசு

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தை பார்த்துக்கொண்டே சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்குது: கணவர் குறித்து சீரியல் நடிகையின் ஷாக்கிங் தகவல்!

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சீரியல் நடிகை ஒருவர் பேட்டி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்: 'விக்ரம்' அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக

நின்று கொண்டே பைக் ஓட்டும் கீர்த்தி பாண்டியன்: வைரல் வீடியோ!

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும், சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்தவருமான நடிகை கீர்த்தி பாண்டியன் நின்றுகொண்டே ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய வீடியோ