ஜி.வி.பிரகாஷின் 'கொம்புவச்ச சிங்கமடா'. ஜல்லிகட்டு பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு பிரச்சனை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ் எழுதிய பாடிய 'கொம்பு வச்ச சிங்கமடா' பாடல் சற்று முன் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. பாடலின் வரிகளை கேட்கும்போதே நரம்பு முறுக்கும் வகையில் உள்ள இந்த பாடலின் வரிகள் இதோ:
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லு இருந்தா வந்து மல்லுக்கட்டு
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லு இருந்தா வந்து மல்லுக்கட்டு
கொம்பை தொட்டு கும்பிடுட்டு
பொத்திகிட்டு நடையை கட்டு
கொம்பு வச்ச சிங்கமடா
இது கொம்பு வச்ச சிங்கமடா
கொம்பு வச்ச சிங்கமடா
ஜல்லிக்கட்டு காளையடா
கொம்பு வச்ச சிங்கமடா
இது கொம்பு வச்ச சிங்கமடா
கொம்பு வச்ச சிங்கமடா
மஞ்சுவிரட்டு காளையடா
முரட்டு காளைங்களை பாரு
அலங்காநல்லூர் தேரு
ஏறு தழுவுறது ஊரு
தடுக்க நினைக்க நீ யாரு
தடுக்க நினைக்க நீ யாரு
வாடி வாசலிலே திறந்து வைக்கிறோம்
தேடி வந்துதான் வம்புக்கிழுக்குற
கோடி பேரு இங்கிருக்கிறோம்
வாங்கி கட்டிக்க வந்துருக்க
இது மஞ்சுவிரட்டு தாண்டா
நீ நெஞ்ச நிமித்தி வாடா
எங்க வீட்டு புள்ளைங்கடா
ஜல்லிக்கட்டு காளைங்கடா
எங்களோட நீதி
உங்களுக்கு சேதி
தடைகளை மீறி
குறிச்சிட்டோம் தேதி
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லு இருந்தா மவனே மல்லுக்கட்டு
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லு இருந்தா மவனே மல்லுக்கட்டு
கொம்பு வச்ச சிங்கமடா
இது கொம்பு வச்ச சிங்கமடா
கொம்பு வச்ச சிங்கமடா
ஜல்லிக்கட்டு காளையடா
கொம்பு வச்ச சிங்கமடா
இது கொம்பு வச்ச சிங்கமடா
கொம்பு வச்ச சிங்கமடா
மஞ்சுவிரட்டு காளையடா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com