மெர்சலுக்கு குவியும் கோலிவுட் திரையுலகினர்களின் ஆதரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் பிரச்சனைகளை சந்திக்காமல் வெளியானதாக தெரியவில்லை. ஆனால் கடந்த காலங்களில் ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு பிரச்சனை வந்தபோது ஒருசிலர்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஒற்றுமை தொடர்ந்து இருந்தால் எந்த ஒரு அரசியல் தலைவர்களும் நடிகர்களை மிரட்ட பயம் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மெர்சல்' படத்திற்கு இதுவரை ஆதரவு கொடுத்த நடிகர்களின் கருத்துக்களை தனித்தனியாக பார்த்தோம். தற்போது மொத்தமாக ஒருதடவை பார்ப்போமா!
கமல்ஹாசன்: மெர்சல் படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். தர்க்கரீதியான பதிலுடன் எதிர்மறையான விமர்சனம். விமர்சகர்களை மௌனமாக்க வேண்டாம். இந்தியா தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் போதே பிரகாசிக்கும்.
ரஜினிகாந்த்: 'மெர்சல்' படத்தில் முக்கிய கருத்துக்கள் அலசப்பட்டுள்ளது. படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
சரத்குமார்: மெர்சல் பட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் அழுத்தம் தரப்படுவதாகவும், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் இடம் பெற்றிருப்பதில் தவறில்லை
அரவிந்தசாமி: ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி விதிப்புகளில் தங்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது தற்போது அரசை அவர்கள் கேள்வி கேட்பது எப்படி தவறாகும்?
குஷ்பு: ப.ஜ.க தற்போது தலைநகரம் படத்தில் வரும் வடிவேலு போல் இருக்கிறது, ‘பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்: மெர்சல் பட விவகாரத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது.
ஸ்ரீப்ரியா: உலகளவில், பேசப்படும் வசனத்தை திரைப்பட வசனகர்த்தா எழுதி தந்து அதை நடிகர் பேசுகிறார், இதில் விளக்கம் கேட்பது நேர்மையாக இருக்காது
காயத்ரி ரகுராம்: திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வசனங்களை எழுதுவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். நடிகர் மீது குறை சொல்ல கூடாது. மெர்சல் படம் தெளிவாகத் தணிகை செய்யப்பட்டுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார்: முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். மீண்டும் சென்சார் எங்களுக்குத் வேண்டாம்.
கரு. பழனியப்பன்: “ஜோசப் விஜய், ஜூனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா, என எல்லோரும் சேர்ந்திருப்பது தானே இந்தியா? இல்லையெனில் சொல்லிவிடு, நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்.”
RJ பாலாஜி: அரசாங்கம் அரசியில் வாதிகள் கொள்கைகள் திரைப்படங்கள் எனும் மக்கள் தொடர்புடைய அனைத்தும் கேள்வி கேட்கப்படும், விமர்சனம் செய்யப்படும். அதை தடுத்து நிறுத்த நினைப்பது வெட்க கேடாகும்.
பார்த்திபன்: இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments