லோகேஷ், த்ரிஷா, அர்ச்சனா கல்பாதி.. தோனியின் சிக்சர்களை பார்க்க குவிந்த கோலிவுட் பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தாலும் இந்த போட்டி இறுதி பந்து வரை திரில்லாக இருந்தது என்பதும் கடைசி பந்தில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படி ஒரு திரில்லிங்கான மேட்ச் லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்துள்ளனர். நடிகர் தயாரிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் இந்த போட்டியை பார்த்த வீடியோ வைரலானது.
அதேபோல் பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை த்ரிஷா ஆகியோர் இல்லம் இந்த போட்டியை நேரில் பார்த்தனர். நடிகை த்ரிஷா சிஎஸ்கே அணியின் ரசிகை என்பதை காட்டிக்கொள்ள மஞ்சள் உடையில் வந்திருந்தார். மேலும் நடிகை பிந்து மாதவி இந்த போட்டியை கண்டு ரசித்ததோடு சிஎஸ்கே கொடியையும் அசைத்து அவ்வப்போது வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார்.
நடிகை மேகா ஆகாஷ் தனது தாயாருடன் வந்திருந்து இந்த போட்டியை பார்த்த நிலையில் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது விரக்தி அடைந்ததையும் பார்க்க முடிந்தது.
மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் சஞ்சய் பாரதி உள்ளிட்டவர்களும் இந்த போட்டியை நேரில் பார்த்தனர். தோனி தயாரித்து வரும் ’எல்ஜிஎம்’ படத்தின் குழுவினர்களும் ஹரிஷ் கல்யாண் உடன் இந்த போட்டியை பார்த்து ரசித்தனர்.
மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது சகோதரர் மணிகண்டன் இந்த போட்டியை நேரில் பார்த்தனர். தமிழ் நட்சத்திரங்கள் மட்டுமின்றி மலையாள நட்சத்திரங்களான ஜெயராமும், பிஜூ மேனனும் இந்த போட்டியை பார்க்க வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com