ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: கண்டனம் தெரிவித்த கோலிவுட் ஸ்டார்கள்

  • IndiaGlitz, [Wednesday,May 23 2018]

தமிழகத்திற்கு குறிப்பாக தூத்துகுடி மக்களுக்கு நேற்று ஒரு கருப்பு தினம் என்றே கூறலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடிய பொதுமக்களை எதிரிநாட்டு தீவிரவாதிகள் போல் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த கொடுமையை ஜீரணிக்க இன்னும் பல வருடங்கள் ஆகும். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் உள்பட 11 பேர் பலியான விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ரஜினி, கமல், விஷால் உள்பட பல கோலிவுட் திரையுலக பிரபலங்கள் தெரிவித்த கண்டனங்கள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். தற்போது இன்னும் சில கோலிவுட் ஸ்டார்கள் தெரிவித்த கண்டனங்கள் குறித்து பார்ப்போம்

பார்த்திபன்: துப்பாக்கி வெடிக்கும் - தெரிந்தும்,
புரட்சி வெடிக்கும் - தெரியாமலும்
அதிகாரம் ஜனநாயகத்தை
ஒடுக்க நினைக்கிறது
பசியால்
மார்பை நாடி வரும் சிசுவை
முலைக்காம்பே தோட்டாவாக இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல் போல ...தம் மக்களை தாயே(அரசே) கொன்று குவித்தால்?

தனுஷ்: ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

பாடலாசிரியர் விவேக்: நான் திரைப்படத்திற்காக எழுதிய முதல் வசனம் நினைவிற்கு வருகிறது. எங்கள மாதிரி உள்ளவங்க கைகள் எப்பவும் கீழயே இருக்கும்னு நெனச்சிடாத.. ஒருநாள் .. எங்க கைகள் ஓங்கும் என் உடன்பிறந்த ஒவ்வொருவர் மரணத்திற்கும் நீங்கள் பதில் சொல்லும் நேரம் வரும்

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: அரசு தனது வன்முறையும், கொலைகளும் மக்கள் போராட்டத்தை மௌனித்துவிடுமென நினைப்பது ஜனநாயக படுகொலையின் உச்சம். தண்டிக்கப்படாத தீவைப்பும்,தடியடியும் தந்த தைரியமின்று துப்பாக்கிசூடாக தொடர்கிறது.இன்னுமெத்தனை நீதி விசாரனைகள் வேண்டும்,மரணிக்கப்பட்ட ஆன்மாக்களை சாந்தப்படுத்த?

சிம்புதேவன்: தூக்கமற்ற வலி மிகுந்த இரவு! நீதிக்காக மாத கணக்கில் நேர்மையாக போராடிய மக்களை.. வேட்டையாடிய அநீதி! எதை நோக்கி போகிறது நம் எதிர்காலம்?

இயக்குனர் சீனுராமசாமி: உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது இது
ஜனநாயகப் படுகொலை. எக்காரணம் கொண்டும் துப்பாக்கி சூடு ஏற்றுக்கொள்ள முடியாது. உரிமை கேட்போர் மீது நடந்த உச்சகட்ட வன்முறை

விஜய்சேதுபதி: எல்லோருடைய நல்வாழ்விற்காக மட்டுமே போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கேட்டவுடன் வருத்தம், கோபமடைந்தேன்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

விவேக்: நம் மண்ணின் மைந்தர்கள் மரணி ப்பதை பார்ப்பதை விட சோகம் வேறு எதுவும் இல்லை.இறந்து பட்ட அந்த சகோதர சகோதரிகளுக்காக நம் இதயம் அழுகிறது. அந்த நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும்.

சசிகுமார்: நச்சுக்கு பலியாவதை விட தம் மண்ணைக் காக்க மடிவதே மேல் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களை கைவிட்டது யார்? இப்போது அவர்களைக் கொல்வது நீதியா? தூத்துக்குடி மக்களின் உயிர் காக்க

சத்யராஜ்: எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா?

பா.ரஞ்சித்: அரசு எப்போதும் மக்களுக்கானதாக இல்லவே இல்லை. அரசு என்பது வன்முறை-அதிகாரம்-கொடுக்கோலன் & பயங்கரவாதம். நிலம்,நீர்&மக்களின் ரத்தம் உறிந்து கொழிக்கும் கார்ப்ரேட்டுகளின் அரசே நீ ஒரு போதும் கவலைகொள்ள மாட்டாய்..உனக்கு தெரியும் மறதி கலையில் கைதேர்ந்தவர்கள் நம் மக்கள் என்று

பாரதிராஜா: தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு இதுபோன்ற சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. மக்களை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைத்திருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது

ஜெயம் ரவி: ஒருவருடைய உயிரை எடுக்க இன்னொருவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கொலைக்கு எனது கடுமையான கண்டனங்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

சித்தார்த்: மரணம் அடைந்த போராட்டக்காரர்களின் மார்பில் பாய்ந்த ஒவ்வொரு துப்பாக்கி குண்டும் மீண்டும் வந்து தமிழ்நாட்டின் இந்த அரசாங்கத்தை அழித்துவிடும்.

வரலட்சுமி: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் அப்பாவிகள் தான் பலியாகியுள்ளனர். தமிழக அரசுக்கு உண்மையில் இதுவொரு கருப்பு தினம்தான். உயிரிழந்த குடும்பங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்

இயக்குனர் அறிவழகன்: ஜாலியன்வாலாபாக் 1919 படுகொலைக்கும் தூத்துக்குடி 2018 படுகொலைக்கும் வருஷங்களை தவிர பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை

More News

சென்னையில் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம்: 2 பெண்கள் புகார்

சென்னையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பெண்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினோம்: டிஜிபி விளக்கம்

தூத்துகுடியில் நேற்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் இதுவரை 11 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்

நிபா தாக்கி உயிரிழந்த நர்ஸ்: கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்

கேரள மாநிலத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் தாக்கியதால் பலியாகும் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வரும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தின்

இதைவிட கீழ்த்தரமான அரசாங்கத்தை பார்க்கவே முடியாது: கொந்தளித்த பியூஷ் மனுஷ்

இன்று நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒட்டு மொத்த தமிழர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம தெரிவித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ்