கேப்டன்களாக மாறிய சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ்

  • IndiaGlitz, [Friday,March 25 2016]
தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டி நடைபெறவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

6 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இந்த ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் அணிகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ் தலைமையில் நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த அணிகளில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இன்னும் ஒருசில அணிகள் மற்றும் அவற்றின் கேப்டன்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் இந்த போட்டியை காண அதிகளவிலான ரசிகர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

சீயான் விக்ரம் தற்போது அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது...

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த நடிகர் சங்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெருமையை சங்கத்தின் துணைத்தலைவர் கருணாஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்...

நயன்தாராவின் பேய்ப்படத்தில் யார் ஹீரோ தெரியுமா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த முதல் பேய்ப்படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் மற்றொரு...

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

கும்கி இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

12 இந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் சமுத்திரக்கனி படம்

கடந்த 2012ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'சாட்டை' என்ற சமூக அக்கறை அம்சங்கள் நிறைந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை...