அரசியலிலும் உங்கள் சாதனை தொடரட்டும்: கமலுக்கு பிரபல நடிகர் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். இன்று மாலை 6 மணிக்கு அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கின்றார். இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் திரையுலகில் இருந்தும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து பிரபல நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் சென்று பல சாதனைகள் படைத்தவர் நீங்கள். அந்த சாதனை அரசியலிலும் தொடரட்டும்.'என்று கூறியுள்ளார்.
அதேபோல் நடிகர் விவேக் கூறியபோது, 'இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள்' என்று கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் வின்னர் ஆரவ், 'டியர் கமல் ஹாஸன் சாருக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு நல்ல தலைவர் தேவை. அது நீங்களாக தான் இருக்க முடியும் என்று ட்வீட் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளரான கவிஞர் சினேகன், 'இதுவரை கமல்ஹாசன் அவர்களை சினிமாவில் காதலராக பார்த்து வந்தோம். இனிமேல் அவரை நாங்கள் தலைவராக பார்க்க போகிறோம்' என்று கூறியுள்ளார். இவர் கமல்ஹாசனுடன் ராமேஸ்வரம், மதுரைக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி கூறியதாவது: மாற்றம் நீ பார்க்க விரும்பும் மாற்றமாக இருப்பாய். நமக்காக மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் கமல்ஹாஸன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு ஒருசில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் திரையுலகினர்களும், பொதுமக்களும் பெரும் ஆதரவு தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com