தோனியை புகழும் திரையுலக பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி ஒரு மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்பதை நேற்றைய போட்டி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 74 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்து சென்னை அணி தத்தளித்து கொண்டிருந்த நேரத்தில் களமிறங்கினார் தல தோனி. வெற்றி என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில் ராயுடுவுடன் சேர்ந்து சிக்ஸர்களாக அடித்து நொறுக்கிய தோனி, 34 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இந்த நிலையில் தோனிக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துமழை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தளத்தில் தோனியின் அதிரடி ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்
இயக்குனர் வெங்கட் பிரபு: என்ன ஒரு வெற்றி, என்ன ஒரு மேட்ச், தல தோனி, ராயுடு என்ன ஒரு இன்னிங்ஸ்
நடிகர் விஷ்ணு விஷால்: அருமையான மேட்ச். தோனி, என் நண்பன் ராயுடுவின் ஆட்டம் அபாரம்
இயக்குனர் சுசீந்திரன்: செம
'நீயா நானா கோபிநாத்: யாருப்பா சொன்ன off side போட்டா தலைவன் தடுமாறுவான்னு. கடைசி சிக்சர் பார்த்தீரல்லோ. எல்லா சைடும் அவன் சைடு தான்
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி: வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு. ராயுடு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com