சுஜித் மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புக்குழுவினர் கடந்த 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய நிலையில் சுஜித்தின் உடலை மட்டுமே மீட்க முடிந்தது. அரசு இயந்திரங்கள் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு, அமைச்சர்கள், அதிகாரிகள் விடிய விடிய தூங்காமல் நடுக்காட்டுப்பட்டியிலேயே தங்கியிருந்து மீட்புப்பணியை கவனித்த போதிலும், இந்த சவால் நிறைந்த மீட்புப்பணி கடைசியில் தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் சிறுவன் சுஜித்துக்காக தமிழகமே இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் திரையிலக பிரபலங்களும் #RIPSujith என்ற ஹேஷ்டேக்கில் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி: சுஜித்தின் மறைவு இதயத்தை நொறுக்கும் ஒரு செய்தியாக உள்ளது. அந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு கடவுள் இந்த இழப்பை தாங்கக்கூடிய வலிமையை தரவேண்டும்
இசையமைப்பாளர் டி.இமான்: இந்த உலகமே சுஜித் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்தது. நம்பிக்கை வீணானது. சுஜித்தின் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
நடிகை காஜல் பசுபதி: எங்கள் தங்கமே! என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையடா செல்லம். நீ இப்போது கடவுளின் பாதுகாப்பில் இருப்பதால் நீ இனி பயப்பட தேவையில்லை. உன்னை இனி கடவுள் பார்த்து கொள்வார்.
பிக்பாஸ் தர்ஷன்: சுஜித்தின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சிறுவனின் ஆத்மா சாந்தி அடையட்டும். எங்கள் இதயங்களில் என்றும் நீ வாழ்வாய்
ஐஸ்வர்யா ராஜேஷ்: சுஜித்துக்கு எனது இரங்கல்: இனியொரு சம்பாம் இதுபோல் நடக்கக்கூடாது
யாஷிகா ஆனந்த்: உன்னை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். இந்த கடினமான நேரத்தில் கடவுள் சுஜித்தின் பெற்றோர்களுக்கு மனவலிமையை தர வேண்டும். இனிமேலாவது அரசு இதுபோன்ற மரணம் நிகழாதவகையில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments