எஸ்பிபி மரணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவு அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் எஸ்பிபி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை த்ரிஷா தனது டுவிட்டரில் கூறியபோது ’எனக்கு இது ஒரு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு என்றும் அவருடைய பாடலுக்கு தான் மிகப்பெரிய ரசிகை என்றும் ஒரு இசைமேதை மறைவிற்கு இரங்கல் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் எஸ்பிபி மறைவிற்கு நடிகர் விக்ரம் பிரபு, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், இசையமைப்பாளர் இமான், இயக்குனர் கார்த்திக் நரேன், நடிகர் ஆர்யா, நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் பிரசன்னா, நடிகர் அருண் விஜய், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் கௌதம் கார்த்திக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் ஹரீஷ் கல்யாண், பாடலாசிரியர் விவேக், ஆர்ஜே ரம்யா சுப்பிரமணியம், பாடகர் கிரிஷ், செஸ் விளையாட்டு வீரர் விசுவநாதன் ஆனந்த், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News

பாடகர் எஸ்பிபி காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்றிரவு முதல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

பள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா??? வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்!!!

பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கும் மத்திய அரசு புதிய வரி விதிப்பைக் கொண்டு வரப்போவதாகச் ஒரு அறிக்கை கடந்த தினங்களாக சமூக வலைத்தளங்களில்

ரயில் தண்டவாளத்திலேயே தூங்கி 2 ஆவது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்…

மத்திய அரசு சில தினங்களுக்குமுன் விவசாயத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திருத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களவை

தூக்கில் தொங்கிய 13 வயது பள்ளி மாணவி… பாலியல் வன்கொடுமைக்கு தூண்டப்பட்டாரா???

சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த ஜுன் 14 ஆம் தேதி 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீழடியில் 21 அடுக்குக் கொண்ட உறை கிணறு... வெட்ட வெளிச்சமான தமிழர் நாகரிகம்!!!

சிவகங்ககை மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.