சிஎஸ்கே வெற்றி குறித்து திரையுலகினர்களின் கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே ஆப் போட்டியில் சிங்க நடை போட்டு வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, மீண்டும் மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோத காத்திருக்கின்றது. இந்த தொடரில் மூன்று முறையும் இறுதி போட்டிகளில் மட்டும் இரண்டு முறையும் மும்பையிடம் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே அடிபட்ட சிங்கம் போன்று பழிவாங்க நாளை பழிவாங்க காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதை பார்ப்போம்:
இயக்குனர் சி.எஸ்.அமுதன்: டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்.
நடிகை கஸ்தூரி: பத்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி எட்டு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதை நம்பவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமே தோனிதான்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி: மும்பை இந்தியன்ஸ் உங்களை ஞாயிறு அன்று சந்திக்கின்றோம்.
நடிகை வரலட்சுமி: வாவ்! சிங்கங்கள் மீண்டும் ஒருமுறை கர்ஜித்துள்ளன. ஃபைனலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
நடிகர் கபீர்சிங்: ஹலோ மும்பை, மே 12ஆம் தேதி உங்களை சந்திக்கின்றோம்.
இயக்குனர் வெங்கட்பிரபு: எட்டாவது முறை ஃபைனல்: நாலாவது முறையும் ஜெயிப்போம். நம்பிக்கைதான் வாழ்க்கை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com