அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் அஜித்துக்கு பிறந்து வாழ்த்துக்கள் குவிந்து வருவதால் #HBDThalaAJITH என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்டில் உள்ளது.
இந்த நிலையில் அஜித்துக்கு கோலிவுட் பிரபலங்கள் தங்களுடைய சமூகவலைத்தளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டி.இமான்: பொன் போன்ற இதயம் உள்ள மனிதர் அஜித்துக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சி
காஜல் அகர்வால்: என்னுடன் நடித்த நடிகர்களில் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் அஜித். அற்புதமான நடிகர் அஜித்துக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலனுடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்
நிவின்பாலி: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல
விக்னேஷ் சிவன்: வாழ்க தல அஜித். இன்னும் 100 வருடங்கள் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் அஜித் வாழ ஆண்டவன் அருள் புரிவார்
நடிகர் சதீஷ்: அஜித் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடின உழைப்பாளிகள் அனைவருக்கு அவர் ஒரு மிகச்சிறந்த உத்வேகத்தை கொடுக்கும் மனிதார்
தனுஷ்: அஜித் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு பிளாக்பஸ்டர் வருடமாக இருக்கும்
ரோபோ சங்கர்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் சார். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். உங்கள் விசுவாசம் படத்தில் இடம்பெற்றதில் மகிழ்ச்சி
விஜய்சேதுபதி: பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் சார். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை கொடுப்பார்
இதேபோல் இன்னும் பல திரையுலக பிரபலங்கள் அஜித்துக்கு தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com