டுவிட்டரில் மோதும் கோலிவுட்-டோலிவுட் ஹேஷ்டேக்: தெறிக்கவிடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்த பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடியோ வைரலானதை அடுத்து தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் இடையே டுவிட்டரில் டுவிட் போர் நடந்து வருகிறது என்றே சொல்லலாம்.

தென்னிந்தியாவை டாமினேட் செய்யும் டோலிவுட் என்பதை குறிக்கும் வகையில் #TwoodDominatingSouth என்ற ஹேஷ்டேக்கை டோலிவுட் ரசிகர்கள் வைரலாக்க, நமது கோலிவுட் ரசிகர்கள் இதற்கு பதிலடியாக இந்தியாவை டாமினேட் செய்யும் கோலிவுட் என்பதை குறிக்கும் வகையில் #KWoodDominatingIndia என்ற ஹேஷ்டேக்கை வைரலாகி வருகின்றனர்.

#TwoodDominatingSouth என்ற ஹேஷ்டேக் 12.3 ஆயிரம் டுவிட்டுக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் #KWoodDominatingIndia என்ற ஹேஷ்டேக்கை நம்முடைய கோலிவுட் ரசிகர்கள் 125 ஆயிரம் டுவிட்டுகளை பதிவு செய்து தெறிக்க விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட், டோலிவுட் ஹேஷ்டேக் போரில் கோலிவுட்டின் பக்கத்தில் கூட டோலிவுட் நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற சீனியர் நடிகர்களும், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களும் தனுஷ், விக்ரம் போன்ற விருதுகள் பெறும் நடிகர்களும் இருப்பது கோலிவுட்டில் தான் என்று ரசிகர்கள் டுவிட்டுக்களில் தெரிவித்து வருகின்றனர். இதுவரை அஜீத் - விஜய் ரசிகர்களும், கமல்- ரஜினி ரசிகர்களும் டுவிட்டரில் மோதிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகின் ஒட்டுமொத்த நடிகர்களின் ரசிகர்களை ஒன்றிணைக்க உதவிய டோலிவுட் ரசிகர்களுக்கு நன்றி என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.