கால்கேர்ள் கேரக்டர்களில் கலக்கிய கோலிவுட் நடிகைகள்
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கேரக்டர்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். அப்படி நடிக்க தயங்கும் கேரக்டர்களில் ஒன்றுதான் கால்கேர்ள் என்று கூறப்படும் பாலியல் தொழிலாளி வேடம். ஆனாலும் ஒருசில நடிகைகள் துணிச்சலாக இந்த வேடத்தில் நடித்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த கேரக்டரை துணிச்சலாக நடித்த ஒருசில நடிகைகளை இங்கு பார்ப்போம்.
'இரத்தக்கண்ணீர்' எம்.என்.ராஜம்
கடந்த 1954ஆம் ஆண்டிலேயே பாலியல் தொழிலாளி கேரக்டரில் துணிச்சலாக நடித்த நடிகை எம்.என்.ராஜம். 'காந்தா' என்ற கேரக்டரில் அவர் எம்.ஆர்.ராதாவை மயக்கி அவருடைய பணம் முழுவதையும் கறக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். அந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த 'காந்தா' கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
'அரங்கேற்றம்' பிரமிளா
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தில் தனது ஏழு தம்பி, தங்கைகளின் நல்வாழ்விற்காக பாலியல் தொழிலாளி யாக மாறும் கேரக்டரில் பிரமிளா நடித்திருப்பார். மிகவும் ஆச்சாரமான பிராமண குலத்தில் பிறந்த லலிதா என்ற கேரக்டரில் பிரமிளா வாழ்ந்திருப்பார் என்றே சொல்ல வேண்டும். இறுதியில் பைத்தியமாகும் பரிதாபத்திற்குரிய இந்த கேரக்டர் ரசிகர்களின் கண்களை குளமாக்கிய கேரக்டர்களில் ஒன்று.
'தப்புத்தாளங்கள்' சரிதா
இந்த படமும் கே.பாலசந்தர் இயக்கியதுதான். சரோஜா என்ற கேரக்டரில் பாலியல் தொழிலாளியாக நடித்த சரிதா, ரஜினியை சந்தித்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிப்பதும், ஆனால் எல்லாமே தப்புத்தப்பாக நடந்ததால், மீண்டும் இறுதியில் பாலியல் தொழிலுகே தள்ளப்படும் கேரக்டரில் சரிதா அபாரமாக நடித்திருப்பார்.
'வாழ்வே மாயம்' ஸ்ரீப்ரியா
கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து மாபெரும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'வாழ்வே மாயம்'. தனக்கு புற்று நோய் இருப்பதால் தன் மீது ஸ்ரீதேவிக்கு வெறுப்பு வரவேண்டும் என்பதற்காக 'ராதா' என்ற கேரக்டரில் பாலியல் தொழிலாளியாக நடித்த ஸ்ரீப்ரியாவுடன் நெருங்கி பழகுவதுபோல் கமல் நடித்திருப்பார். இந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா வித்தியாசமான ஒரு மனிதநேயமுள்ள பாலியல் தொழிலாளியாக அமைதியான அதே சமயத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருபார்.
'நாயகன்' சரண்யா
பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு அப்பாவி கேரக்டரில் சரண்யா நடித்திருப்பார். மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் சரண்யாவை கமல்ஹாசன் மீட்டு திருமணம் செய்து கொள்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
'புதுப்பேட்டை' சினேகா
அமைதியான, குடும்பப்பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை சினேகா, முதல்முறையாக செல்வராகவனின் 'புதுப்பேட்டை' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து அதன் பின்னர் தனுஷின் ஜோடியாக மாறும் கேரக்டரில் நடித்திருப்பார். கிருஷ்ணவேணி என்ற கேரக்டரில் நடித்த சினேகாவின் இயல்பான நடிப்பிற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'தனம்' சங்கீதா
கடந்த 2008ஆம் ஆண்டு ஜி.சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் 'தனம்' என்ற பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்த சங்கீதாவின் நடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'வானம்' அனுஷ்கா ஷெட்டி
சிம்பு, பரத் நடிப்பில் வெளியான 'வானம்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த அனுஷ்காவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அனுஷ்கா யாருக்கும் ஜோடியாக நடிக்காமல், தனது தனித்திறமையை நிரூபித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பாய்ஸ்' புவனேஸ்வரி
ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பாலியல் தொழிலாளியாக நடிகை புவனேஸ்வரி நடித்திருப்பார். சித்தார்த், பரத், நகுல் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக புவனேஸ்வரியிடம் சென்று வருவது போன்ற ஒரு காமெடி காட்சி இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
'அம்முவாகிய நான்' பாரதி
பார்த்திபன் நடித்த அம்முவாகிய நான்' படத்தில் சிறுவயதிலேயே அனாதையான ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாறுவதும் பின்னர் எழுத்தாளர் பார்த்திபன் எழுதும் நாவல் ஒன்றுக்கு தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறுவதும், அவரது கதையை கேட்ட பின்னர் அவரையே பார்த்திபன் திருமணம் செய்ய ஆசைப்படுவதுமாக இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். பாரதி இந்த படத்தில் மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இவர்களை போல் இன்னும் பல நடிகைகள் இந்த பாலியல் தொழிலாளி வேடத்தில் துணிச்சலாக நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான 'தி டே' என்ற பாலிவுட் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், மிக துணிச்சலாக பாலியல் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கேரக்டர்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள்....