வெங்கல்ராவ் வீடியோவை பார்த்து முதல் நபராக உதவி செய்த ஹீரோ.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் தான் உடல் நலம் இன்றி இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை செய்ய நிதி உதவி தேவைப்படுகிறது என்றும் உருக்கமாக வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் முதல் நபராக பிரபல நடிகர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் வெங்கல்ராவ் என்பதும், இவர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதன் பிறகு சிகிச்சைக்கு பணம் இல்லாததால் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற பண வசதி இல்லை என்றும், ஒரு கை மற்றும் ஒரு கால் தனக்கு செயல் படவில்லை என்றும், பேசக்கூட முடியவில்லை என்றும், பணமில்லாமல் தவிப்பதால் தன்னுடைய சிகிச்சைக்கு பணம் கொடுத்து சினிமா கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு முதல் நபராக வெங்கால்ராவ் மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதையடுத்து மேலும் சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.