வெங்கல்ராவ் வீடியோவை பார்த்து முதல் நபராக உதவி செய்த ஹீரோ.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் தான் உடல் நலம் இன்றி இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை செய்ய நிதி உதவி தேவைப்படுகிறது என்றும் உருக்கமாக வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் முதல் நபராக பிரபல நடிகர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் வெங்கல்ராவ் என்பதும், இவர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதன் பிறகு சிகிச்சைக்கு பணம் இல்லாததால் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற பண வசதி இல்லை என்றும், ஒரு கை மற்றும் ஒரு கால் தனக்கு செயல் படவில்லை என்றும், பேசக்கூட முடியவில்லை என்றும், பணமில்லாமல் தவிப்பதால் தன்னுடைய சிகிச்சைக்கு பணம் கொடுத்து சினிமா கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு முதல் நபராக வெங்கால்ராவ் மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதையடுத்து மேலும் சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

106 வயதில் பறந்து பறந்து சண்டை செய்ய முடியுமா? 'இந்தியன் தாத்தா' குறித்து ஷங்கர் கொடுத்த விளக்கம்..!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் அந்த ட்ரெய்லரின் ஒரு காட்சியில் இந்தியன் தாத்தா பிறந்த வருடம் 1918

200 கிமீ வேகத்தில் பறக்கும் அஜித் கார்.. த்ரில் வீடியோ வைரல்..!

நடிகர் அஜீத் தற்போது அஜர்பைஜான் நாட்டில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் அதில் அந்தரத்தில் அஜித்

ராகுல் காந்திக்கு திடீரென வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. என்னமோ திட்டம் இருக்குது..!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நடிகரும், தமிழக  வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா அடுத்த பட ஹீரோ இவரா? மல்டி ஸ்டார் படம் என்ன ஆச்சு?

இயக்குனர் முத்தையா அடுத்த படத்தை மல்டி ஸ்டார் படமாக இயக்க இயக்குகிறார் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது அவருடைய படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் கசிந்து உள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியா? மீண்டும் இணையும் சக்சஸ் கூட்டணி..!

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் மீண்டும் அவருடன் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாக