ரூ.2 லட்சம் நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் விஜய் ரசிகர்கள் முதல் நபராய் களத்தில் இறங்கி தங்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி செய்து வருவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது இந்த கொரோனா காலத்தில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் பல்வேறு உதவிகள் செய்துள்ள நிலையில் கொல்லம் விஜய் ரசிகர்கள் ரூ.2 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கொல்லம் நண்பன்ஸ் பெயரில் கேரளாவில் செயல்பட்டு வரும் விஜய் ரசிகர்கள் இருதய கோளாறால் அவதிப்படும் அருண் என்ற ரசிகருக்கு மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அதேபோல் நாள் முழுவதும் மக்களின் பாதுகாப்பில் உறுதுணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள PPE சாதனங்களையும், ஆன்-லைன் மூலம் படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு இலவச தொலைபேசிகளையும் வழங்கியுள்ளனர். மேலும் வறுமையில் வாடும் மூன்று நபர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை எங்கள் சேவை தொடரும் எனவும் கொல்லம் நண்பன்ஸ் விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் செய்யும் சேவையை அனைத்து தரப்பட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments