முதல் பரிசு பெற்ற இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு ஆச்சரிய தகவல்..

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

மேடை உள்ள படத்தைப் பார்த்தால் ஒரு அழகிய பெண் என்றுதான் அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கோட்டம்குல்கரா என்ற பகுதியில் தேவி கோயில் ஒன்று உள்ளது. இங்கே ஒவ்வொரு மலையாள மாதமான மீனம் மாதத்தில் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவில் முழுக்க முழுக்க பெண்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் கலந்துகொள்ளும் பெண்கள் அனைவருமே பெண்கள் அல்ல என்பதும் அவர்கள் பெண்கள் உடைகளில் வரும் ஆண்கள் என்பதுதான் விழாவின் சிறப்பம்சம்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பெண் வேடமிட்டு ,சேலை, சுடிதார் அணிந்து மல்லிகை பூ வைத்துக்கொண்டு பெண்கள் போலவே அச்சு அசலாக மேக்கப் செய்து ஆண்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள் பிறப்பால் பெண்கள் என்றுதான் பலர் நம்பும் அளவுக்கு தத்ரூபமாக அந்த மேக்கப் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 24, 25 தேதிகளில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்ட பெண் வேடமிட்ட ஆண்களில் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ளவர் தான் முதல் பரிசை பெற்றுள்ளார். மிகச் சிறந்த ஒப்பனைக்காக இவ்வாறு அந்த பரிசை வென்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.