முதல் பரிசு பெற்ற இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு ஆச்சரிய தகவல்..

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

மேடை உள்ள படத்தைப் பார்த்தால் ஒரு அழகிய பெண் என்றுதான் அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கோட்டம்குல்கரா என்ற பகுதியில் தேவி கோயில் ஒன்று உள்ளது. இங்கே ஒவ்வொரு மலையாள மாதமான மீனம் மாதத்தில் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவில் முழுக்க முழுக்க பெண்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் கலந்துகொள்ளும் பெண்கள் அனைவருமே பெண்கள் அல்ல என்பதும் அவர்கள் பெண்கள் உடைகளில் வரும் ஆண்கள் என்பதுதான் விழாவின் சிறப்பம்சம்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பெண் வேடமிட்டு ,சேலை, சுடிதார் அணிந்து மல்லிகை பூ வைத்துக்கொண்டு பெண்கள் போலவே அச்சு அசலாக மேக்கப் செய்து ஆண்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள் பிறப்பால் பெண்கள் என்றுதான் பலர் நம்பும் அளவுக்கு தத்ரூபமாக அந்த மேக்கப் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 24, 25 தேதிகளில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்ட பெண் வேடமிட்ட ஆண்களில் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ளவர் தான் முதல் பரிசை பெற்றுள்ளார். மிகச் சிறந்த ஒப்பனைக்காக இவ்வாறு அந்த பரிசை வென்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

More News

'7ஆம் அறிவு' முதல் '1947' வரை.. ஏ.ஆர்.முருகதாஸ் உடன் உள்ள கனெக்சன் குறித்து சிவகார்த்திகேயன்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' முதல் தற்போது அவர் தயாரித்துள்ள '1947' படம் வரை தனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கியுள்ளார் 

அஜித்துக்கு ஆறுதல் கூறிய லைகா தமிழ்க்குமரன்.. 'ஏகே 62' குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசிகளிலும் சமூக வலைதளங்களிலும் பலர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்

ஆஸ்கர் விருதுக்காக செலவு செய்த தொகை இத்தனை கோடியா? எஸ்.எஸ்.ராஜமவுலி மகன் தகவல்..!

சமீபத்தில் ஆஸ்கர் விருது விழா நடத்தப்பட்ட நிலையில் இந்த விழாவில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு விருது

நெருங்கிய நண்பரின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்: என்ன படம்?

தமிழ் திரை உலகின் பிசியான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்பதும் 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் பல முன்னணி நடிகர்களை இயக்க காத்திருக்கிறார் என்பது தெரிந்ததே.

சொந்த வீடு கட்டிய விஜய் டிவி சீரியல் நடிகை.. கணவர் மகனுடன் கிரகப்பிரவேசம்..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த நடிகை ஒருவர் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறிய