ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லையா? பிரபல திரையரங்க நிர்வாகம் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரையரங்கு ஊழியர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தா ஐநாக்ஸ் திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று சமூகவலைதளங்கள் மூலம் குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமின்றி ஐநாக்ஸ் வளாகங்கள் முன் நின்று போராட்டம் நடத்தியதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியானது
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த ஐநாக்ஸ் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் யாரும் ஐநாக்ஸ் குழும ஊழியர்கள் கிடையாது. அவர்கள் இன்னோவ் எனப்படும் நிறுவனத்தின் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள். ஐநாக்ஸ் மற்றும் இன்னோவ் நிறுவனத்துக்கு இடையேயான ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் தேதியே முடிந்துவிட்டது. இது இன்னோவ் நிறுவனத்துக்கும் முறையாக தெரியப்படுத்தப்பட்டது.
70,000 ஆயிரம் ஊழியர்களை கொண்ட இன்னோவ் நிறுவனம் ஆண்டுக்கு 1300 கோடி வருமானம் ஈட்டுகிற போதிலும் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கிறது. அந்த ஊழியர்கள் மத்தியில் ஐநாக்ஸ் நிறுவனம் குறித்து தவறான எண்ணத்தை விதைக்கிறது. இதற்கு ஐநாக்ஸ் குழுமம் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதுடன் அந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கி அவர்களிடம் உண்மையை எடுத்துரைக்குமாறு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout