கோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன்??? டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு!!!
- IndiaGlitz, [Tuesday,June 23 2020] Sports News
இந்திய டுடே நடத்திய ஒரு நேர்காணலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமகாலத்தில் யார் சிறந்த பேட்ஸ் மேன் என்ற கேள்விக்கு சுவாரசியமான ஒரு பதிலை வழங்கி அசத்தி இருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இமாலய வெற்றிபெறும் ஆற்றல் கொண்டவர். அதேபோல ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கிவிடும் திறமைக் கொண்டவர். இந்நிலையில் இருவரில் யார் சிறந்த பேட்ஸ் மேன் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் அடிக்கடி விவாதத்தைக் கிளப்புவது வழக்கம். அப்படி வார்னரிடம் எழுப்பப் பட்ட கேள்விக்கு அவர் ஒரு அசத்தலான பதிலை வழங்கியிருக்கிறார்.
“எங்களை பொறுத்த மட்டில் போட்டி என்பது ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும். அதனால் பவுலருக்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையேதான் போட்டியே தவிர பேட்ஸ்மேன்களுக்கு இடையே அல்ல” எனக் கூறியிருக்கிறார். இறுதியாகப் போட்டி பேட்டுக்கும் பந்துத்துக்கும்தானே தவிர இரண்டு ஆட்டக்காரர்களிடம் தேவையில்லாத ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். விராட் கோலி பழைய விளையாட்டு முறைகளுடன் விளையாடி வருபவர். அதில் தேர்ந்த வீரராகவும் அவர் இருந்து வருகிறார். ஸ்மித் கிரிக்கெட் மட்டைகளைப் பயன்படுத்துவதில் புதுமையான அம்சங்களை பின்பற்றுபவர். ஆனால் இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு எப்பொழுதும் வீராட் கோலியே முன்னணி இடத்தைப் பிடித்து விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் பார்டர் –கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. அதில் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருக்கிறார்கள். அந்த அனுபவம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் எனவும் இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் எனவும் எதிர்ப்பார்க்கப் பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டுகளில் ஜம்பவான்களாக கருதப்படும் இரண்டு வீரர்கள் ஒரே களத்தில் சந்திக்க இருக்கிறார்கள். அந்நிகழ்வைப் பார்க்க விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.