close
Choose your channels

உங்க புகைப்படம் கூகுள்ல கூட கிடைக்கல.. ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய 'கோலங்கள்' நடிகைகள்..!

Friday, June 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் கூகுளில் கூட கிடைக்கவில்லை என்று ரசிகர் ஒருவர் கூறிய நிலையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ‘கோலங்கள்’ சீரியலில் நடித்த நடிகைகள் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியலில் தான் நடிகை தேவயானி முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார் என்பது தெரிந்தது. அவர் ஏற்று நடித்த அபி என்ற கேரக்டர் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் ‘கோலங்கள்’ சீரியலில் தேவயானியை அடுத்து நடித்த இன்னொரு நடிகை நீலிமா இசை. இந்த சீரியலில் இவருக்கும் அழுத்தமான கேரக்டர் கிடைத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது என்பது இந்த சீரியலை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் கோலங்கள் சீரியல் முடிந்ததும் தேவயானி, நீலிமா இசை இருவரும் வெவ்வேறு சீரியல்களிலும் திரைப்படங்களிலும் பிஸியான நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

தேவயானி நடித்த ‘தொட்டாசிணுங்கி’ ‘சுவர்ணமுகி’ உட்பட சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தான் தேவயானி மற்றும் நீலிமா இசை இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இருவரும் இணைந்த புகைப்படத்தை நீலிமா இசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அதில், ‘மீண்டும் தேவயானி அவர்களை சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, அவர் மிகவும் அன்பானவர், அவருடன் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கேஎஸ் அதியமான் அண்ணா அவர்களுக்கு எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு தான் ரசிகர் ஒருவர் ’நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை கூகுளில் சர்ச் பண்ணி தேடினேன், ஆனால் கிடைக்கவில்லை, கடைசியில் நீங்களே இன்ஸ்டாவில் பதிவு செய்து விட்டீர்கள், நன்றி அக்கா’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.