உங்க புகைப்படம் கூகுள்ல கூட கிடைக்கல.. ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய 'கோலங்கள்' நடிகைகள்..!

  • IndiaGlitz, [Friday,June 28 2024]

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் கூகுளில் கூட கிடைக்கவில்லை என்று ரசிகர் ஒருவர் கூறிய நிலையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ‘கோலங்கள்’ சீரியலில் நடித்த நடிகைகள் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியலில் தான் நடிகை தேவயானி முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார் என்பது தெரிந்தது. அவர் ஏற்று நடித்த அபி என்ற கேரக்டர் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் ‘கோலங்கள்’ சீரியலில் தேவயானியை அடுத்து நடித்த இன்னொரு நடிகை நீலிமா இசை. இந்த சீரியலில் இவருக்கும் அழுத்தமான கேரக்டர் கிடைத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது என்பது இந்த சீரியலை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் கோலங்கள் சீரியல் முடிந்ததும் தேவயானி, நீலிமா இசை இருவரும் வெவ்வேறு சீரியல்களிலும் திரைப்படங்களிலும் பிஸியான நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

தேவயானி நடித்த ‘தொட்டாசிணுங்கி’ ‘சுவர்ணமுகி’ உட்பட சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தான் தேவயானி மற்றும் நீலிமா இசை இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இருவரும் இணைந்த புகைப்படத்தை நீலிமா இசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அதில், ‘மீண்டும் தேவயானி அவர்களை சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, அவர் மிகவும் அன்பானவர், அவருடன் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கேஎஸ் அதியமான் அண்ணா அவர்களுக்கு எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு தான் ரசிகர் ஒருவர் ’நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை கூகுளில் சர்ச் பண்ணி தேடினேன், ஆனால் கிடைக்கவில்லை, கடைசியில் நீங்களே இன்ஸ்டாவில் பதிவு செய்து விட்டீர்கள், நன்றி அக்கா’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் வேண்டும்.. ஆளும் அரசு செய்ய தவறிவிட்டது: விஜய் பேசிய அரசியல்..!

தளபதி விஜய் இன்று 10,12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு தரும் நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அதில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

'ராயன்' ஃபேமிலி கேரக்டர்கள் இவர்கள் தான்.. ரகசியத்தை உடைத்த நடிகர்..!

தனுஷ் நடித்து முடித்துள்ள அவரது 50வது திரைப்படமான 'ராயன்' படத்தை அவரே இயக்கி உள்ளார் என்ற நிலையில் இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள

லியோ, ஜவானை முந்திய 'கல்கி 2898 ஏடி' முதல் நாள் வசூல்., உலகம் முழுவதும் எத்தனை கோடி?

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து

இந்த வாரம் ஒரே ஒரு சந்தானம் படம் மட்டும் தான்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போல் திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன

ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.