'கோலமாவு கோகிலா' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,July 05 2018]

ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் ஹீரோயின்களுக்கு ஒரு நல்ல வேடம் கிடைப்பதே அரிதான நிலையில் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. 'மாயா', 'டோரா', 'அறம்' வரிசையில் 'கோலமாவு கோகிலா' இன்னொரு நயன்தாரா படம்.

கோலமாவு என்ற பெயரில் கடத்தப்படும் போதைப்பொருள் நயன்தாராவிடம் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த டிரைலரில் நயன்தாரா பேசும் வசனம் மிகவும் குறைவு என்றாலும் அவரது கண்கள் பேசும் ஆயிரம் பக்கங்கள்.

நயன்தாராவை ஒருதலையாய் காதலிக்கும் கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ள யோகிபாபு வழக்கம்போல் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். 'கலக்க போவது யாரு'  புகழ் ஜாக்குலினுக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் இருக்க வாய்ப்பு உள்ளது.

அனிருத்தின் பின்னனி இசை பட்டையை கிளப்புவதில் இருந்தே இந்த படம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது. மொட்டை ராஜேந்திரன், சரண்யா வரும் ஒருசில காட்சிகளும் கலக்கல்.

மொத்தத்தில் இயக்குனர் நெல்சன் நயன்தாராவை வைத்து ஒரு விறுவிறுப்பாக காமெடி மற்றும் ஆக்சன் கலந்த ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மகத்தை காறித்துப்பிய பாலாஜி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், காதல் மன்னன் போல் அந்த வீட்டில் உள்ள பெண்களிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா இருவரிடம்

கமல், ரஜினியால் மாற்றம் வராது, வறட்சிதான் வரும்: தமிழக அமைச்சர்

தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இறங்கியதில் இருந்தே முதல்வர் கனவில் இருந்த பல அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கறைக்க தொடங்கிவ்ட்டது.

கிரிக்கெட்-கபடியை இணைக்கும் 'தோனி கபடிக்குழு'

தமிழ் சினிமாவில் விளையாட்டு சம்பந்தமான திரைப்படங்களுக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. 'வெண்ணிலா கபடிக்குழு', முதல் தற்போது தயாராகி வரும் 'கனா' வரை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுவதுண்டு.

ராஜமவுலியின் அடுத்த படத்தில் வித்தியாசமான முயற்சி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகின.

கமல் எல்.கே.ஜி, ரஜினி பேபி கிளாஸ்: அன்புமணி விமர்சனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.