'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணைந்த 'கோலமாவு கோகிலா' டீம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வெளிவர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தில் 'கோலமாவு கோகிலா' படத்தின் டீம் இணைந்துள்ள தகவலை சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பார். 'கல்யாண வயசுல' என்ற அந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது
இந்த நிலையில் நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். டி.இமான் இசையில், சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில், அனிருத் குரலில் உருவாகும் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலின் வரிகள் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் வந்ததில்லை என்று சிவகார்த்திகேயன் பெருமையாக சொல்வதும், அதற்கு கேலியாக பார்ப்பதுமான வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது
.@Siva_Kartikeyan ezhudha, rockstar @anirudhofficial paada , orey fun dhaan!
— Sun Pictures (@sunpictures) August 30, 2019
An @Immancomposer musical! #NammaVeettuPillai tracklist Today at 7pm!@Pandiraj_dir @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @yogibabu_offl @ItsAnuEmmanuel#NVPAudioFromTomorrow pic.twitter.com/ZME9gOjbu3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments