'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,July 24 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே நாளில் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படமும் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் 'விஸ்வரூபம் 2' படம் ரிலீஸாகி ஒருவாரம் கழித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 'விஸ்வரூபம் 2' திரைப்படம் சோலோவாக சுதந்திரதின விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
 

More News

அடுத்தடுத்த நாட்களில் தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்களின் ரிலீஸ்

தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று தனுஷூக்கு இணையாக முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார்.

மோகன்லாலுக்கு எதிராக வழக்கா? பிரகாஷ்ராஜ் விளக்கம்

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், சமீபத்தில் நடிகை ஒருவரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்து கொள்ள சம்மதித்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக நுழையும் விஜய் பட நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் யாரும் பார்வையாளர்களின் மனதை தொடாத நிலையில் பிக்பாஸ் ஸ்கிரிப்டில் புதிய போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பா? நிர்மலா சீதாராமன் டுவீட்டால் பரபரப்பு

தமிழக துணை முதல்வர் இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒருசில அமைச்சர்களை சந்திக்கவிருப்பதாக இன்று காலை செய்தி வெளிவந்தது.

விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி: வெற்றி விழாவில் அசத்திய 'கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.