close
Choose your channels

அஜித்தை அடுத்து கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் மோதும் நயன்தாரா

Thursday, July 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தை அடுத்து கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் மோதும் நயன்தாரா

உலக நாயகன் கமல்ஹாசனின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த படத்தின் ரிலீசை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் 'தூங்காவனம்' ரிலீஸ் ஆகி சுமார் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் ரிலீஸ் ஆகும் கமல்ஹாசனின் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'கோலமாவு கோகிலா' படமும் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு திரையுலகினர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் முந்தைய படமான 'தூங்காவனம்' படம் வெளியான தினத்தில்தான் அஜித்தின் 'வேதாளம்' ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்குலின், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment