நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 'இமைக்கா நொடிகள்', கொலையுதிர்க்காலம்', நரசிம்ம ரெட்டி, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் 'விசுவாசம்' மற்றும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் மற்றும் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் மார்ச் 5ஆம் தேதியும் சிங்கிள் பாடல் வரும் மார்ச் 8ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் ரெளடிதான், வேலைக்காரன் படங்களுக்கு பின்னர் நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் கேமிராவும், நிர்மல் எடிட்டிங் பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.

More News

என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: சம்பள பாக்கி குறித்து கவுதமி

நடிகர் கமல்ஹாசன் தனக்கு 'தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்ததற்கு சம்பளம் தரவில்லை என சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவிக்காக 37 வருட வழக்கத்தை புறக்கணித்த ரஜினி

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த கோலிவுட் பிரமுகர்களான ரஜினி, கமல், நாசர் உள்பட பலர் மும்பை சென்றுள்ளனர்

கவுதமியின் சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து:

தமிழர்களுக்கு பெருமை தரும் வகையில் அஸ்வினுக்கு கிடைத்த புதிய பதவி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

சிரியா படுகொலையை உச்சு கொட்டுவதால் என்ன பயன்? நடிகர் பிரசன்னாவின் ஆவேச பதிவு

சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது.