'மூடர்கூடம்' நவீனுடன் இணைந்த சிம்பு

  • IndiaGlitz, [Thursday,June 23 2016]

கடந்த 2013ஆம் ஆண்டு நவீன், ஓவியா நடிப்பில் வெளியான 'மூடர்கூடம்' திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய நவீன் தற்போது மீண்டும் தயாரித்துள்ள படம் 'கொளஞ்சி.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை பிரபல நடிகர் சிம்பு இணையதளங்களில் வெளியிடவுள்ளார்.
நவீன் தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மைச்சம்பவம் ஒன்றின் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 13வயது சிறுவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சங்கவி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ராஜாஜி, நைனா சர்வார், உள்பட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.