நயன்தாரா ரசிகர்களுக்கு மீண்டும் இரட்டை விருந்து

  • IndiaGlitz, [Friday,December 21 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் மீண்டும் ஒரே மாதத்தில் இரண்டு நயன்தாரா படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அதே ஜனவரியில் நயன்தாரா நடித்த இன்னொரு திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் 'கொலையுதிர்க்காலம்'. இன்று வெளியான இந்த படத்தின் புதிய போஸ்டரில் 'ஜனவரி வெளியீடு' என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் கமல்ஹாசன் நடித்த 'உன்னை போல் ஒருவன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோரி ஜெர்யக் ஒளிப்பதிவும், ராமேஷ்வர் பகவத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

எனக்கே இந்த கதி என்றால்...விஷால் ஆவேச பேட்டி

தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சங்கத்திற்கு சீல் வைத்த வட்டாட்சியர், இரு தரப்பினர்களும் சமாதானமாக வந்தால் மட்டுமே அலுவலகம் திறக்க வழிவகை செய்யப்படும்

விஜய்சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நேற்று வெளியான 'சீதக்காதி' திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் மாதவன் மகன் பெற்ற முதல் தங்கப்பதக்கம்

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்

ஜெயம் ரவியின் இயக்கத்தில் யோகிபாபு?

ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்று அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலளித்தார்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: தமிழக அரசு அதிரடி

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருசில தயாரிப்பாளர்கள் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டு போட்டு மூடினர். அந்த பூட்டை இன்று விஷால் உடைக்க முயன்றதால் கைது செய்யப்பட்டார்